×

‘ஒரே நாடு-ஒரே தேர்தல்’ குழுவில் உள்ள பிரபல வக்கீலுக்கு லண்டனில் 3வது திருமணம்: இங்கிலாந்து பெண்ணை கரம்பிடித்தார்

புதுடெல்லி: ‘ஒரே நாடு-ஒரே தேர்தல்’ குழுவில் இடம்பெற்றுள்ள பிரபல வக்கீலுக்கு லண்டனில் 3வது திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவர் இங்கிலாந்து பெண்ணை கரம்பிடித்தார். நாட்டின் பிரபல மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரும், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான ஹரிஷ் சால்வே, தனது 68வது வயதில் மூன்றாவது முறையாக ட்ரினா என்ற இங்கிலாந்து பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் லண்டனில் நடந்தது. இவர்களது திருமண நிகழ்ச்சியில், ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி, நீதா அம்பானி, தொழிலதிபர் லட்சுமி மிட்டல் ஆகியோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஹரிஷ் சால்வேவின் முதல் மனைவியின் பெயர் மீனாட்சி. தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பின்னர் தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மீனாட்சியை 2020ம் ஆண்டில் ஹரிஷ் சால்வே பிரிந்தார்.

அடுத்த சில மாதங்களில் இங்கிலாந்தை சேர்ந்த இசைக் கலைஞர் கரோலின் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அப்போது கரோலினுக்கு 18 வயதுடைய மகள் இருந்தார். இந்நிலையில் ஹரிஷ் சால்வே, மூன்றாவது முறையாக ட்ரினா என்ற இங்கிலாந்து பெண்ணை திருமணம் செய்து கொண்டது ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு அமைத்துள்ள ‘ஒரே நாடு-ஒரே தேர்தல்’ குறித்து ஆராயும் எட்டு பேர் குழுவில், ஹரிஷ் சால்வேயின் பெயரும் இடம்பெற்றுள்ளதால் அவரது மூன்றாவது திருமணம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

The post ‘ஒரே நாடு-ஒரே தேர்தல்’ குழுவில் உள்ள பிரபல வக்கீலுக்கு லண்டனில் 3வது திருமணம்: இங்கிலாந்து பெண்ணை கரம்பிடித்தார் appeared first on Dinakaran.

Tags : -only ,New Delhi ,One-country-only elections' committee ,London ,England ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...